

கடலில் பரவிய எண்ணெய் படலத் தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கப்பல் நிறுவனங்களின் காப்பீடு மூலம் ரூ.125.34 கோடியை இழப்பீடாக பெற்றுத் தருமாறு மத்திய அரசிடம் கோர உள்ளோம் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலில் கலந்த கச்சா எண்ணெய் படலத்தில் 85 சதவீதத்துக்கும் மேல் அகற்றப் பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப் பட்ட இடத்தில் மீதமுள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியும் நாளை (இன்று) நிறை வடையும் என எதிர்பார்க்கிறோம். மேலும், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற் கரைகளில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி முடி வடைந்துவிட்டது.
கடல் மீன்களை சாப்பிட வேண்டாம் என்று சமூக ஊடகங் களில் வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடலில் எண்ணெய் கலந்த சம்பவத்துக்கு கப்பல் நிறுவனங்கள்தான் பொறுப்பு. எனவே, சென்னை, திரு வள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்தை சார்ந்து இருப் பவர்கள் என 1 லட்சத்து 11 ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு கப்பல் நிறுவன காப்பீடு மூலம் ரூ.125 கோடியே 34 லட்சத்து 86 ஆயிரத்து 250-ஐ இழப்பீடாக பெற்றுத்தருமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கருத்துருவை சமர்ப் பிக்க உள்ளது.
இழப்பீட்டு தொகையை கப்பல்களின் காப்பீட்டு நிறு வனங்கள் வழங்கிய உடன், மீன வர்களுக்கு நிவாரணம் வழங்கப் படும். மேலும், கடல் மீன்களை சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி தொடர்ந்து மீன்களை சாப்பிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறு வனத்தின் டீன் எஸ்.பெலிக்ஸ் கூறுகையில், “கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், பாதிக் கப்படாத பகுதிகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு களின் முதல்கட்ட முடிவில் எண் ணெய் படலத்தால் மீன்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், மீன்கள் ஆழ்கடல் பகுதிகளில் பிடிக் கப்படுவதால் அதுகுறித்து யாரும் பயப்படவேண்டியது இல்லை”. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளர் ஜீட் ஆம்ஸ்ட்ராங், சென்னை மீன் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பி.சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.