

பொறியியல் கலந்தாய்வில் கம்ப் யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) தொடங்கியது. தரவரிசைப் பட்டி யலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 5 பேர் எலெக்ட் ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இசிஇ) பாடப்பிரிவை தேர்வு செய்தனர்.
மற்றவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்தார்கள், முதல் நாள் கலந் தாய்வின்போது பெரும்பாலான மாணவ, மாணவிகளின் தேர்வு இசிஇ பாடப்பிரிவாகத்தான் இருந்தது. அதிலும் அண்ணா பல்கலைக்கழக கல்லூ ரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் சேரவே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், கலந்தாய்வு 2-வது நாளாக நேற்று நடந்தது. கட் ஆப் மதிப்பெண் 196.50 முதல் 194.75 வரை பெற்றிருந்த மாணவ-மாணவிகள் இக்கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வு காலை 7.30 மணிக்கு தொடங்கியது.
2-ம் நாள் கலந்தாய்வில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவ-மாணவிகள் கம்ப் யூட்டர் சயின்ஸ், இன்பர் மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.) பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.
மெக்கானிக்கல் பிரிவிலும் கணிசமான மாணவர்கள் சேர்ந் தனர். இசிஇ பாடப்பிரிவுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே இசிஇ பாடத்துக்கு மாணவர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வரும் நிலையில், தற்போது 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி படிப்புகளுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பட்டதாரிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு இருப்பதாலும், வளாக நேர்முகத்தேர்வு நடத்தும் நிறுவனங்கள் இப்பிரிவுகளில் அதிக எண்ணிக்கையிலான பணி யாளர்களை வேலைக்கு எடுப் பதாலும் இப்பாடங்களை தேர்வு செய்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.