ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசுக்கு பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசுக்கு பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று பிராமணர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அகில பாரத பிராமணர் சங்கத்தின் 3-வது தேசிய மாநாடு நாகர்கோவில், வடிவீஸ்வரத்தில் நடைபெற்றது. தேசியத் தலைவர் டி.பி.குளத்துமணி அய்யர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நடராஜ அய்யர் முன்னிலை வகித்தார். தேசிய பொதுச் செயலாளர் என்.வெங்கட்ராமன் வரவேற்றார்.

ஆதிசங்கரரின் உருவச் சிலையை திருவனந்தபுரத்தில் நிறுவ வேண்டும். அவரது அவதார தினத்தை தேசிய விடுமுறையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவரது தபால் தலை வெளியிட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத் தலின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 50 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தியாவிலேயே கர்நாடகா மற்றும் தமிழகத்தில்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இதை இரு மாநில அரசுகளும் மறு பரிசீலனை செய்து உச்ச நீதிமன்ற வழி காட்டுதலை பின்பற்ற வேண்டும்,

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும். முத்துராமலிங்கத் தேவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். ‘நீட்’ தேர்வில் மாணவ, மாணவிகளை பாதிக்கும் கெடுபிடிகளை கைவிட வேண்டும்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள ஐயத்தை நீக்க சிபிஐ விசாரணை நடத்தி உண்மை நிலையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மூத்த பத்திரிகை யாளர் சோ.ராமசாமி, தொழிலதிபர் ராமசுப்பிரமணியராஜா ஆகியோ ருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் சி.அசோக்குமார், பாஜக தேசிய துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத் தலை வர் தக்கலை சந்திரன், தேசியத் துணைத் தலைவர் எம்.ராமசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். தேசியப் பொருளாளர் எம்.கணேஷ் நன்றி கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in