Published : 08 Mar 2017 07:28 AM
Last Updated : 08 Mar 2017 07:28 AM

எய்ம்ஸ்-அப்போலோ அறிக்கையில் முரண்பாடு? - முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி

எய்ம்ஸ் மற்றும் அப்போலோ வெளியிட்ட அறிக்கைகளில் பல முரண்பாடுகள் இருப்பது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் பாண் டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர் பான அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர் பாக பாண்டியராஜன் கூறியதாவது:

நாங்கள் எழுப்பிய 14 கேள்வி களில் ஒரு கேள்விக்கு மட்டும் எய்ம்ஸ் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அப்போலோவில் இருந்து அளிக்கப்பட்ட முதல் அறிக்கைக்கும் எய்ம்ஸ் அறிக் கைக்கும் மிக அதிகளவு வித்தி யாசம் உள்ளது. குறிப்பாக, 3 நாட்கள் ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக எய்ம்ஸ் அறிக்கையில் உள்ளது. ஆனால், அப்போலோவின் முதல் அறிக்கை யில், ஜெயலலிதா சாப்பிட்டார். அவர் காய்ச்சல், நீர்ச்சத்து குறை பாட்டால் அனுமதிக்கப்பட்டார் என இருந்தது. இதில், அவரது உடல் நிலை ஸ்திரமாக இருந்தது என்பது வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக, 3 நாட்களாக மயக்க நிலையில் ஜெயலலிதா இருந்தார் என்பது, அப்போலோவின் அறிக்கையுடன் முரண்படுகிறது என்பதுதான் முதல் கேள்வி.

உயிர் காக்கும் கருவியை யார் எடுக்க உத்தரவிட்டது? டிசம்பர் 4-ம் தேதி மாலை 4 முதல் 6 மணிக்குள் அமைச்சர்கள் அங்கிருந்தோம். அப்போது எங்களிடம், 7 நாட்களுக்கு இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும். அந்த நாட்களுக்குள் உடல் உறுப்புகள் மீண்டும் இயக்க நிலைக்கு வர 10 சதவீதம் வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இரவு முழுக்க அங்கிருந்தோம். மறுநாள் காலை, அந்த கருவி எடுக்கப்பட்டதாக அறிகிறோம். பின்னர், இயற்கையாக மரணத்தை நோக்கி ஜெயலலிதா செல்வதற்கு பாதை வகுத்தவர் யார்? ரத்த உறவினர் என்பதற்கு எந்த ஆதாரங்கள் தரப்பட்டன என்பதுதான் எங்கள் முக்கியமான கேள்வி.

மேலும், எஸ்பிஜி பாதுகாப்பை விலக்க உத்தரவிட்டது யார்? அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதும் எங்கள் கேள்வியாகும். இந்த கேள்விகளுக்கு விடை இதுவரை கிடைக்காததால், சிபிஐ விசாரணை கோரியுள்ளோம். இன்னும், அப்போலோவின் டிஸ் சார்ஜ் சம்மரி முழுமையாக தரப்பட வில்லை. அதில் இருந்ததாக கூறப்படும், ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் விழுந்து அடிபட்டது என்பது போன்றவை குறித்து விசாரணையில் அறிக்கை அளிக்கப் பட வேண்டும். மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ள எந்த விவரமும், முக்கிய அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில், மருத்துவ, சட்ட மற்றும் குற்றவியல் அம்சங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தினால் பல விஷயங்கள் வெளி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில், சசிகலாவுக்கு பதிலளிக்க மார்ச் 10ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாண்டியராஜன் பதிலளித்ததாவது:

தேர்தல் ஆணையத்தில், 6 ஆண்டுகளாக விலக்கி வைக்கப்பட்ட ஒருவர் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதை சசிகலா குறிப்பாக, அவைத்தலைவரால் கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டவர் ஏற்க வாய்ப்பில்லை. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் வரை, அவைத் தலைவர், பொருளாளருக்கு எல்லா முடிவுகளும் இணைந்து எடுக்க வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது. அந்த நிலையை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதாக எண்ணுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x