விநியோகிக்கப்படாத இலவச லேப்-டாப் விவரங்களை அனுப்ப தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவு

விநியோகிக்கப்படாத இலவச லேப்-டாப் விவரங்களை அனுப்ப தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவு
Updated on
1 min read

கடந்த 2013-2014-ம் கல்வி ஆண்டில் விநியோகிக்கப்படாத லேப்-டாப்கள் பற்றிய விவரங்களை உடனடியாக அனுப்புமாறு தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும் அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும் தமிழக அரசு இலவச லேப்-டாப் (மடிக்கணினி) வழங்கி வருகிறது.

இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கடந்த 2013-2014-ம் கல்வி ஆண்டில் விநியோ கிக்கப்படாத லேப்-டாப்கள் பற்றிய விவரங்களை உடனடி யாக அனுப்புமாறு அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக் னிக் முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பித் துள்ளது.

விநியோகிக்கப் படாத லேப்-டாப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு அந்த விவரத் தையும், விநியோகம் செய்யப்படாத லேப்டாப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரத் தையும் உடனடியாக அனுப்பு மாறு அந்த உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in