ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக அமைச்சர் சரோஜா மீது பெண் அதிகாரி புகார்

ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக அமைச்சர் சரோஜா மீது பெண் அதிகாரி புகார்
Updated on
2 min read

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டு வதாக சென்னை காவல் ஆணை யரிடம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் கொடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக இருப் பவர் ராஜமீனாட்சி. இவர், சென்னை காவல் ஆணையர் கரன் சின்ஹா விடம் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நேற்று புகார் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக நேரடியாக நியமிக்கப் பட்டேன். ஜெயலலிதா மறைவுக் குப் பிறகு என்னால் இந்தப் பணியில் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவால் தொடர்ந்து சிரமப்படுத்தப்பட்டு வருகிறேன்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டுதான் பணி உத் தரவு வழங்குவதாகவும், ஆனால், ஜெயலலிதாவால் தனக்கு அந்த ரூ.10 லட்சம் போய்விட்டது என்றும் அமைச்சர் கூறினார். எனவே, பணி யில் தொடர வேண்டும் என்றால் உடனே அந்தத் தொகையை கொடுக்க வேண்டும் என அமைச் சரும் அவரது கணவரும் தொடர்ந்து என்னை மிரட்டினர். அதனால், கடந்த பிப்ரவரியில் ரூ.10 லட்சம் கொடுத்தேன்.

தற்போது எனது குழந்தையுடன் சேர்ந்திருக்கவும், குடலிறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் பெற்றோருடன் இருந்து பணிபுரிவதற்காகவும் சென்னைக்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். இது சம்பந்தமாக பேச வருமாறு அமைச்சர் சரோஜா அழைத்தார். அதன்பேரில் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் கடந்த 7-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அமைச்சர் சரோஜா வீட்டுக்கு சென்றேன்.

அப்போது அமைச்சர் என்னிடம், ‘‘சென்னைக்கு பணியிட மாறுதல் கேட்ட மனுவை பார்த்தேன். அதற்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும். உனது மாவட்ட செல வினங்களை கூடுதலாகக் காட்டி எனக்கு வேண்டியதை தரவேண் டும். புதிய சத்துணவுப் பணியாளர் கள் நியமனத்துக்கு ரூ.2.72 லட்சம் வீதம் கணக்கிட்டு, குறைந்தது 50 மனுக்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும்’’ என நிர்பந்தித்தார்.

‘‘எங்க அப்பா ஜெயலலிதாவின் குடும்ப நண்பர் என்ற பழைய கதை எல்லாம் இனி எடுபடாது. ஜெயலலிதாவே மறைந்துவிட்டார். சசிகலாவும் தினகரனும் சிறையில் உள்ளனர். இதனால், உனக்கு ஆதர வாக யாரும் பேச மாட்டார்கள். ஆட்சியில் இருக்கும்போதே நானும் சம்பாதிக்க வேண்டும். ரூ.30 லட்சம் கொடு. இல்லையேல் உன் வேலையை காத்திருப்போருக்காக விட்டுக் கொடு. இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை வேலையை விட்டு நீக்குவேன்’’ என மிரட்டினார்.

எங்கள் குடும்பத்தின் மீதுள்ள அபிமானத்தால் ஜெயலலிதா வழங்கிய இந்தப் பணியை புனித மானதாக போற்றி சேவை செய்து வருகிறேன். ஆனால், அமைச்சரின் டார்ச்சரால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை. இத னால், மன உளைச்சலுடன் தவிக்கிறேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாது காப்பு வழங்க வேண்டும். எனது பணியை தொடர்ந்து நிம்மதி யாக செய்ய ஆதரவு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in