Published : 09 Apr 2017 08:02 AM
Last Updated : 09 Apr 2017 08:02 AM

அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஏப்ரல் 15-ம் தேதி அறிவிப்பு: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 15-ம் தேதி அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு நேற்று தெரிவித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கடந்த பிப்.15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை ஹைட்ரோ கார் பன் எதிர்ப்புக் குழு நேரில் சந்தித் தது. இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் மார்ச் 27-ம் தேதி மத்திய அரசு கையெழுத் திட்டது.

இதைத் தொடர்ந்து, திருவரங் குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மார்ச் 31-ம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு சார்பில் நெடுவாசலில் நேற்று ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவது, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடுவது, சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங் களை நடத்துவது, மார்ச் 31-ம் தேதி கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மா னத்தை ஊரெங்கும் பிளக்ஸ் போர்டாக வைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வரும் 15-ம் தேதி மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதன்பிறகு எத்தகைய போராட்டங்களை நடத்துவது என அன்று அறிவிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்டத்தைத் தொடருவோம்

கூட்டத்தில் பங்கேற்ற, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மனைவி சாவித் திரி பேசும்போது, “ஒரு நம் மாழ்வாரின் தலைமையிலான தீவிர முயற்சியால் மீத்தேன் திட்டத்தை கைவிடச் செய்ததைப் போன்று இன்று களத்தில் நிற்கும் ஓராயிரம் நம்மாழ்வார்களின் மூலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டத்தைத் தொடருவோம்” என்றார்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ.க்கள் புஷ்பராஜ், ராஜ சேகரன், சாமிநாதன், உள்ளிட்ட பலர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x