

படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினியின் குடும்பத்தினருக்கு நேற்று ஆறுதல் கூறிய மத்திய அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியா ளர்களிடம் கூறியது: நந்தினி கொலை வழக்கில் தொடர்பு டையவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கொடுத்தால் கூட தகும். நந்தினியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் காவல் துறையினரின் அலட்சியத்தால்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் நந்தினி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசியல் நிலை குறித்து அவர் கூறியபோது, “தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலை, ஒரு கட்சியைச் சார்ந்தது அல்ல. 7 கோடி மக்கள் சார்ந்த பிரச்சினை. இதில், உரிய முடிவெடுக்க ஆளுநருக்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது. ஆளுநர் எடுக்கும் முடிவு நடுநிலையான முடிவாக இருக்கும்” என்றார்.