Published : 22 Apr 2017 08:02 AM
Last Updated : 22 Apr 2017 08:02 AM

செயல்படும் நிலையில் இருந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை கருணாநிதி செய்து முடித்திருப்பார்: ஆற்காடு வீராசாமி முத்து விழாவில் ஸ்டாலின் கருத்து

திமுக தலைவர் கருணாநிதி செயல் படும் நிலையில் இருந்திருந்தால் ஆற்காடு வீராசாமி மூலமாக தமிழகத்தில் பல அரசியல் மாற்றங் களை செய்து முடித்திருப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமியின் முத்து விழா சென்னையில் நேற்று நடந்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வரவேற்றார். முத்து விழா மலரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதனை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற் றுக் கொண்டார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “கட்சியினர்களுக்கு மட்டு மல்லாமல், கட்சித் தலைவர் குடும்பத்திலும் பிரச்சினை என் றால் ஆற்காடு வீராசாமிதான் தூது வராக இருப்பார். கருணாநிதி சொல்லியதை சொல்லியபடியே முடித்துக் காட்டும் திறன் கொண்டவர். கருணாநிதி இப் போது செயல்படும் நிலையில் இருந்திருந்தால் இவர் மூலமாக தமிழகத்தில் பல அரசியல் மாற்றங் களை செய்து முடித்திருப்பார். திமுக எவ்வளவோ சோதனைகள், பிரச்சினைகளை கடந்து வந்து இப்போதும் கம்பீரமாக இருக்கிற தென்றால் அதற்கு ஆற்காடு வீராசாமி போன்றவர்களே காரணம் என்றார்.

சிறப்பு தபால் தலையை புதுச் சேரி மாநில முதல்வர் நாராயணசாமி வெளியிட முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.

முதல்வர் நாராயணசாமி பேசும் போது, “திமுக தலைவர் கருணா நிதிக்கு நிகராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. தற்போது தமிழகத்தை டெல்லி ஆட்டிவைக்கிறது. ஆளுங்கட்சியினர் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டு இருக் கிறார்கள்” என்றார்.

கனிமொழி எம்.பி. பேசும்போது, “அரசியலில் போட்டுக் கொடுத்து தன்னால் எந்த அளவுக்கு குளிர்காய முடியுமோ அந்த அளவுக்கு குளிர்காய வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் ஆற்காடு வீராசாமி முற்றிலும் மாறுபட்டவர். கட்சியில் ஒருவர் மீது கருணாநிதி கோபமாக இருந்தால், ஆற்காடு வீராசாமி சாதுர்ய மாக செயல்பட்டு தலைவரின் கோபத்தை தணிப்பதுடன் தவறு செய்தவருக்கும் மன்னிப்பு கிடைக் கச் செய்வார்” என்றார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை உரை யாற்றினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ண சாமி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், பேராயர் எஸ்றா சற்குணம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங் கினர். ஆற்காடு வீராசாமி ஏற்புரையாற்றினார்.

நிறைவில், டாக்டர் கலாநிதி வீராசாமி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x