

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து செம்மரங்கள் வெட் டிக் கடத்தப்படுவதை தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன்பு சந்திரகிரி அருகே கொட்டிப்ரோலு கிராமத் தைச் சேர்ந்த சாதிக், நவீன் ஆகி யோரைப் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 10 செம் மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் நேற்று திருவள் ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4. 5 டன் எடையுள்ள செம்மரங்களை திருப்பதி அதிரடிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.