

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்த லில் மகளிர் மற்றும் ஆதி திராவிடர் களுக்கான வார்டுகளை ஒதுக்குவது தொடர்பான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை முறை யாக அறிவிக்கவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர், பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை அளிப்பதற் கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பூர்த்தி செய்த விண்ணப்பங் களை மாவட்ட திமுக அலுவலகங்களிலோ அல்லது திமுக தலைமை அலுவல கத்திலோ வரும் 24-ம் தேதி வரை அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.