Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

பேரவையில் மக்கள் பிரச்சினையைப் பேச அனுமதிக்காவிட்டால் போராட்டம்: காங்கிரஸ்

புதுச்சேரி சட்டப்பேரவையை வரும் 12-ம் தேதி கூட்டுவ தாக அறிவித்துள்ளது கண்டிக்கத் தக்கது. மக்கள் பிரச்சினையைப் பேச அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வரு மான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

புதுச்சேரியில் வரும் 12-ம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டுவதாக அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தேதிக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். மக்கள் பிரச்சினையைப் பேச அனு

மதிக்காததால் கடந்த கூட்டப் பேரவைக் கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது. அப்போது சட்டப் பேரவைத் தலைவர் எங்களிடம் பேசினார். ஜனவரி மாதத்தில் எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி கூடிய விரைவில் மக்கள் பிரச்சினைகளைப் பேரவையில் பேச வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என உறுதி தந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளை அழைத்து இதுவரைப் பேசவில்லை.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை யைப் பேச அனுமதிக்கா விட்டால் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.

பால் விலையை உயர்த்துவதற்காக செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்கியுள்ளனர்.பால் வாங்க முறையான டெண் டர் விடப்படவில்லை. எனது தொகுதியில் பள்ளி மாணவர் கடத்தப் பட்டு அவர் திரும்பி வந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பணம்தந்து மாணவர் மீட்கப்பட்டதாகக் கூறுகின்றனர். குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களில் இரு துறைகளில் பணிபுரிந் தோருக்கு மட்டுமே வேலை தந்துள்ளனர். இதர துறைகளில் இருந்து நீக்கப்பட்டோருக்கும் பணி தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x