கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் 5-வது நாளாக நிறுத்தம்

கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் 5-வது நாளாக நிறுத்தம்
Updated on
1 min read

கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் தொடர்ந்து 5-வது நாளாக மாநில எல்லையில் நிறுத் தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

கர்நாடக அணைகளில் இருந்து 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் தமிழகத் துக்கு திறந்துவிட உச்ச நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினத்தில் இருந்து கன்னட அமைப்புகள் தண்ணீர் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்துக்கு செல் லும் தமிழக லாரிகள், பேருந்துகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், கடந்த 5-ம் தேதி முதல் ஓசூர் வழியாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட கர்நாடக மாநில நகரங்களுக்கு செல்லும் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள், ஓசூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப் படுகின்றன. தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி யில் கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்லும் தமிழக லாரிகள் கிருஷ் ணகிரி, ஓசூரில் நிறுத்தப்பட்டு சூழ்நிலையைப் பார்த்து இயக் கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை முதல் அத்திப் பள்ளியில் இயல்பு நிலை திரும்பியதால் லாரிகள், தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியது. கர்நாடகாவில் இருந்து அம்மாநில பேருந்துகள் ஓசூருக்கு இயக்கப்பட்டன.

தமிழக பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள், ஓசூர் வரை தமிழக பேருந்திலும், ஓசூரில் இருந்து தனியார் மற்றும் கர்நாடக மாநில அரசு பேருந்துகளிலும் சென்றனர். ஜூஜூவாடி, அத்திப்பள்ளியில் தமிழக, கர்நாடக போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in