Published : 08 Feb 2017 12:21 AM
Last Updated : 08 Feb 2017 12:21 AM

மக்கள் விரும்பினால் ராஜினாமா வாபஸ்: ஓபிஎஸ் 10 தெறிப்பு

தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 9 மணியளவில் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தை வலம் வந்து அஞ்சலி செலுத்தியவர் 40 நிமிடங்கள் அங்கேயே தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவர் தியானத்தில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகு மவுனம் கலைத்து ஓபிஎஸ் பேசியவற்றில் 10 தெறிப்புகள்:

* முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான்தான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் கருத்து வேற்றுமைகளை தவிர்க்கவே முதல்வர் பதவியை ஏற்றேன்.

* அதிமுக பொதுச் செயலாளர் பதவி மதுசூதனனுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானார்.

* பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்கவேண்டும் என திவாகரன் வற்புறுத்துவுதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

* சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை

* ஜல்லிக்கட்டு தொடர்பாக நான் ஒரு புறம் பிரதமரை பார்க்க சென்ற போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதே கோரிக்கை வைத்தார்.

* வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என பேட்டி கொடுத்தார். என்னை வற்புறுத்தி முதல்வர் ஆக்கிவிட்டு ஏன் இப்படி அவமானப்படுத்துகிறார்கள் என்று கேள்வி எழுந்தது.

* என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவர் மற்றொருவர் முதல்வர் ஆக வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அது சரிதானா என்று சசிகலாவிடம் கேட்டேன். சசிகலா கண்டிப்பதாகக் கூறினார்.

* தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் ஒருவர் தலைவராக வரவேண்டும். அதிமுக பொதுச்செயலாளராக அடிமட்ட தொண்டனே வர வேண்டும்.

* ஆட்சிக்கு நல்லவர் தலைவராக பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்காக தன்னந்தனியாக நின்று போராடுவேன்.

* கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் : மக்கள் விரும்பினால் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x