சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலைக் கல்லூரிகளில் 600 இடங்கள் அதிகரிப்பு

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலைக் கல்லூரிகளில் 600 இடங்கள் அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 600 இடங்கள் அதி கரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் தெரிவித்தார்.

தற்போது மாணவ, மாணவி களிடையே பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைந்து, கலை அறிவியல் படிப்புகளில் சேரும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்ற னர். ஆனால், இடங்கள் குறைவாக இருப்பதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குகூட இடம் கிடைக்காமல் போய்விடுகிறது.

சென்னையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்லூரி நிர்வாகத்தினர் முயற்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பேராசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி களில் பல்வேறு படிப்புகளில் 600 இடங்கள் வரை அதிகரிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பா.டேவிட் ஜவகர் கூறியதாவது:

கலைக் கல்லூரிகளில் இளங் கலை படிப்புகளில் அதிகபட்சம் 70 இடங்களுக்கும் இளம் அறிவியல் (பிஎஸ்சி) படிப்புகளுக்கு அதிக பட்சம் 50 இடங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். மாணவர்களிடம் இருந்து அதிகப்படியான விண் ணப்பங்கள் வரும்போது ஏற் கெனவே உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில அடிப்படை விதிமுறைகள் உள்ளன. கல்லூரியில் கட்டிடம், ஆய்வகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், தேவை யான ஆசிரியர்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்து அனுமதி அளிக்கப் படும்.

அந்த வகையில், இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் சுயநிதி கல்லூரி கள், அரசு உதவி பெறும் கல்லூரி கள், தன்னாட்சிக் கல்லூரிகள் அனுமதி கோரியிருந்தன. அதன் அடிப்படையில், விதிமுறைகள் ஆய்வுசெய்யப்பட்டு இதுவரையில் 600 இடங்களை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி களிடம் இருந்து இன்னும் கோரிக்கைகள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த எண் ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in