

சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டை புதிய இடத்துக்கு வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற் போதைய நிலையே தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அருண் குமார் உள்ளிட்ட 50 மீனவர்கள் தாக்கல் செய்த மனுவில், “தமிழக மீன் வளத் துறை சார்பில் புதிய இடத்தில் உலகத் தரத்தில் புதிய மீன் மார்க்கெட் கடந்த 2016-ம் ஆண்டு கட்டிமுடிக்கப் பட்டது. ஆனால் இந்த புதிய மீன் மார்க்கெட்டில் எந்த அடிப்படை வசதி களும் இல்லை. பலமுறை மனு கொடுத் தும் இதுவரையிலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் இந்த மீன் மார்க் கெட்டை வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் புதிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். எனவே இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என அதில் கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம்.துரைசாமி முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, இதுதொடர்பாக மீன் வளத் துறை மற்றும் சென்னை துறை முகப் பொறுப்புக் கழகம் ஆகியவை 4 வாரத்தில் பதிலளிக்கவும், அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.