Published : 03 Nov 2014 09:21 AM
Last Updated : 03 Nov 2014 09:21 AM

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைக்கு விரைவில் புதிய முறை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிக பட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம்.

அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்எட் பட்டம் பெற்றிருந்தால் அதற்கு ஓர் ஊக்க ஊதியமும், எம்பில், பிஎச்டி, பிஜிடிடிஇ (ஆங்கில பயிற்சியில் முதுகலை பட்டயம்)-இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு இன்னொரு ஊக்க ஊதியமும் பெறத் தகுதியுடையவர் ஆவர்.

நேரடியாக முதுகலை பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேரு வோர் தொலைதூரக்கல்வி மூலம் எம்எட் முடித்துவிட்டு முதல் ஊக்க ஊதியத்தைப் பெற்றுவிடுவர்.

தற்போது தொலைதூரக்கல்வி மூலம் எம்எட் படிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்துவிட்டது. ஒரு சில பல்கலைக்கழகங்களே அதுவும் குறைந்த நபர்களையே எம்எட் படிப்புக்கு சேர்க்கின்றன. இந்த சூழ்நிலையில், அவர் களுக்கு 2 ஊக்க ஊதியங்கள் வழங்குவதற்கு எம்பில், பிஎச்டி, பிஜிடிடிஇ படிப்புகள்-இவற்றி லேயே இரு படிப்புகளை கணக் கில்கொள்ள பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மேற் கண்ட கல்வித்தகுதிகள் உடைய முதுகலை பட்டதாரி ஆசிரியர் களின் பட்டியலை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித் துள்ளார்.

இந்த புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் கூறும்போது, “தமிழகத்தில் 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார் கள். அவர்களில் 16 ஆயிரம் பேர் நேரடியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள்.

எம்பில், பிஎச்டி முடித்தவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். எனவே, அரசின் புதிய முறையால் பயன் என்று பார்த்தால் அதிகம் இருக்காது” என்றார்.

நேரடியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவோர் தொலைதூரக்கல்வி மூலம் எம்எட் முடித்துவிட்டு முதல் ஊக்க ஊதியத்தைப் பெற்றுவிடுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x