20-ம் தேதி அஞ்சல் சேவை குறைதீர்ப்பு நாள்

20-ம் தேதி அஞ்சல் சேவை குறைதீர்ப்பு நாள்
Updated on
1 min read

அஞ்சல் சேவை குறைதீர்ப்பு நாள் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் சேவை சார்ந்த குறைதீர்ப்பு நாள் வரும் 20-ம் தேதி காலை 11.00 மணியளவில் செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நடை பெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பதிவு அஞ்சல், பார்சல், காப்பீடு அஞ்சல், பணவிடை ஆகியவற்றை அனுப்புவதில் / பெறுவதில் சிரமம் / குறையேதும் இருந்தால் பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் பெயர், அனுப்புநர், பெறுநர் முகவரி ஆகிய தகவல்களு டன் தங்கள் புகார் மனுக்களை அஞ்சலக கண்காணிப்பாளர், செங்கல்பட்டு கோட்டம், செங்கல்பட்டு - 603001 என்ற முகவரிக்கு இன்றைக்குள் (18-ம் தேதி) அனுப்ப வேண்டும். சேமிப்பு கணக்குகள் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் சம்பந்தப்பட்ட குறைகளையும் அனுப்பலாம்.

மேலும், வாடிக்கையாளர் கள் 20-ம் தேதியன்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரிலும் வந்து கலந்துகொள்ளலாம். மத்திய பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in