

தேனியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய 3 பக்தர்கள் உள்பட நான்கு பேர் பலியாகினர். விபத்தில் பலியான பக்தர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 24 பேர், மினி பேருந்தில் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்ற மினி பேருந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் காட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, தேனியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற லாரி மீது மினி பேருந்து மோதியது.
இதில், மினி பேருந்தில், பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரும் லாரி டிரைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்தவர்கள் தேனி மற்றும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்தினால், தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.