

அதிமுகவினர் எச்சரிக்கையுடனும், மிகுந்த பாதுகாப்புடனும் வாகனங் களில் பயணிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலூர் கிழக்கு மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், சங்கரமல்லூர் கிளைச் செயலாளர் ஜி.வரதராஜ், சாலை விபத்தில் இறந்துவிட்டார். மேலும், இந்த விபத்தில் சங்கரமல்லூர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சி.ஆனந்தன் படுகாயமடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி யறிந்து நான் வருத்தமுற்றேன்.
அதிமுக தொண்டர்கள் வாகனங்களில் பயணிக்கும்போது மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தேன். இருந்தபோதும், இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இவற்றில் விலை மதிக்க முடியாத தொண்டர்கள் மரணமடைவதும், படுகாயமடைவ தும் என்னை வேதனையில் ஆழ்த் துகிறது. இனி வரும் காலங்களில் அதிமுக தொண்டர்கள் மிகுந்த பாதுகாப்பு, எச்சரிக்கையுடன் தங்கள் பயணங்களை மேற்காள்ள வேண்டும்.
நிதி உதவி
விபத்தில் மரணமடைந்த, வரதராஜ் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்தனின் மருத்துவ சிகிச்சைக்கு அதிமுக சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.