

மூளைச்சாவு அடைந்த கல்லூரி விரிவுரையாளர் உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் சி.செந்தில்குமார்(28). அங்கு உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். கடந்த 17-ம் தேதி காலை 6.30 மணிக்கு செந்தில்குமார் பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது பைக் மீது எதிரே வந்த கார் மோதியது.
தீவிர சிகிச்சை
இதில் பலத்த காயமடைந்த அவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை வடழபனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து செந்தில்குமாரிடம் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கணையம் போன்றவற்றை எடுத்தனர்.
கல்லீரல் மற்றும் ஒரு சிறு நீரகத்தை சிம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகளுக்கு டாக்டர்கள் பொருத்தினர். மற்றொரு சிறுநீர கம், இதயம் மற்றும் கணையம் மற்ற தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டது. கல்லூரி விரிவுரையா ளரின் உடல் உறுப்புகள் தானத் தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.