

விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சி யால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, போக்குவரத்துத் துறை ஆணையர் சத்ய பிரதாப் சாகு, மாவட்ட ஆட்சி யர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பிறகு வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி யால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க போர்க் கால நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கவும், உயிரிழந்த விவசாயி களின் குடும்பங்களுக்கு நிவார ணம் வழங்கவும் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள தமிழக அமைச்ச ரவைக் கூட்டத்தில் முடிவு எடுக் கப்படும் என்றார்.