

அமைச்சர் ஜெயக்குமாருக்கு கட்சி வரலாறு தெரியாது என்று சாடிய மதுசூதனன் நடராஜன் தயவில் அவர் அமைச்சராகியுள்ளார் என்று சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன், ‘ஜெயக்குமார் என்னை விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு அதிமுக-வின் வரலாறு தெரியாது.
ஜெயலலிதா சிறைக்குச் சென்று விடுவார் தான் முதலமைச்சராவேன் என்று கூறி அவைத்தலைவர் பதவியை இழந்தவர்தான் இந்த ஜெயக்குமார்.
சசிகலாவுக்கு கடல் நத்தையை பரிசாக அளித்து நடராஜன் தயவில் அமைச்சர் பதவி வாங்கியவர் அவர். ஆனால் இவர் எங்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறோம் என்று குற்றம்சாட்டுகிறார். அவர் ஒரு அரசியல்வாதியே அல்ல’ என்றார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் மக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழ்ந்து விடும். அதன் பின்னர் அந்த அணியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள்” என்றார்.