

சென்னை அரசு அருங்காட்சிய கத்தில் அமராவதி காட்சிக் கூடத்தை விரிவுபடுத்தி, சேமிப் பில் உள்ள சிற்பங்கள் காட்சிப் படுத்தப்படும் என அமைச்சர் பி.பெஞ்சமின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று தொல்லியல் மற்றும் அருங் காட்சியகங்கள் துறை மானிய கோரிக்கை தொடர்பாக, அவர் அறிவித்துள்ளதாவது:
இந்து சமய அறநிலையங்கள் துறையின் 75 செயல் அலுவலர் களுக்கு 2 வார கால ‘புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு’ பயிற்சி அளிக் கப்படும். தொல்லியல் துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவுகளான பாதுகாப்பு, அகழாய்வு மற்றும் கல்வெட்டு பிரிவுகளுக்கு அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும், 3 நவீன வாகனங்கள் வாங்கப்படும். புதிய நிரந்தர ஓட்டுநர் பணியிடங்களும் உரு வாக்கப்படும்.
சென்னை அரசு அருங்காட்சி யகத்தின் படிமங்கள் காட்சிக்கூட கட்டிடத்தில், சேமிப்பில் உள்ள 100 சிறந்த படிமங்கள், 200 சிறு படிமங்களை காட்சிப்படுத்த, காட்சிப் பெட்டி, மேடை, மின்னொளி அமைப்புகள் ஏற் படுத்தப்படும். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் அமராவதி காட்சிக் கூடத்தை மேலும் விரிவுபடுத்தி சேமிப்பில் உள்ள அமராவதி சிற்பங்களை காட்சிப்படுத்த ஏதுவாக, தகுந்த காட்சிப் பெட்டிகள், மேடை, மின்னொளி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சென்னை அருங்காட்சியகத் தில் தற்போது சேமிப்பில் உள்ள ஈர நிலையில் பதப்படுத்தப்பட்ட விலங்கின மாதிரிகள் மற்றும் சில விலங்குகளின் எலும்புக் கூடுகள் முதன்மை கட்டிட விரிவாக்க தொகுப்பின் விலங்கியல் பிரிவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடைத்தளத்தில் அமைந்துள்ள முட்டைகள் மற்றும் கூடு களுடனான அருகி வரும் தத்தித் தாவும் பறவைகள் காட்சிக் கூடத்தை முழுமை யாக புதுப்பிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அறிவித்தார்.