Published : 28 Feb 2014 12:00 AM
Last Updated : 28 Feb 2014 12:00 AM

பிளாஸ்டிக் சேகரிப்பில் சிறந்து விளங்கும் அமைப்புகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம், தமிழக அரசு அறிவிப்பு

பிளாஸ்டிக் சேகரிப்பில் சிறப்பாகப் பணியாற்றும் கிராமங்கள், சுய உதவிக் குழுக்கள், பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என்றும், தகுதியானவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா விருப்பத்திற்கிணங்க தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு உதவியாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதில் மாநிலத்தில் சிறந்து விளங்கும் கிராமங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் 3 சிறந்த பள்ளி களுக்கு ஊக்கத் தொகை வழங்க சுற்றுச்சூழல்துறை உத்தேசித்துள்ளது.

இதற்கான தகுதி நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதன்படி, சிறந்த கிராமங்களைப் பொருத்தவரை, பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக இருக்க வேண்டும். பசுமையான, சுத்தமான முன்னோடி கிராமமாக இருத்தல் அவசியம். மழைநீர் சேகரித்தல், சூரியசக்தி தகடுகள் நிறுவுதல், மரம் வளர்த்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கிராமமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், முதல்பரிசு ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.3 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

பிளாஸ்டிக் இல்லாத கிராமங்கள் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கிராமங் களின் செயல்பாடு அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், சுற்றுச் சூழல் துறைக்கு பரிந்துரை செய்வார். சிறந்த 3 கிராமங்கள் வல்லுநர் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

சுய உதவிக் குழுக்களைப் பொருத்த வரை, தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பதில் முக்கிய பங் காற்றியிருக்க வேண்டும். பிளாஸ்டிக் கிற்கு எதிரான விழிப்புணர்வுப் பணி கள், துணிப்பைகள், காகிதப்பைகள், காகிதக் குவளைகள், சணல் பைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தல் போன்ற சூழல் நடவடிக் கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

இத்தகைய சூழல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சுய உதவிக் குழுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண் ணப்பிக்க வேண்டும். அவர் சுற்றுச் சூழல் துறைக்கு பரிந்துரை செய்வார். அதில் சிறந்த 3 சுய உதவிக் குழுக் களை வல்லுநர் குழு தேர்வு செய்யும்.

பசுமையான, சுத்தமான பள்ளிக ளைப் பொருத்தவரை, பிளாஸ்டிக் இல் லாத பசுமை மற்றும் சுத்தமான பள்ளிக ளாக இருக்க வேண்டும். கருத்தரங்கு கள், நடைப்பயணம், பேரணி, முகாம், கருத்துப்பட்டறைகள், மரம் வளர்த்தல், போட்டிகள், பள்ளி வளாகத்தை தூய் மையாக வைத்திருத்தல் போன்ற பல் வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். சிறந்த பள்ளிகளுக்கும் முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

பள்ளிகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் விண்ணப் பிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந் துரை செய்வார். சிறந்த பள்ளிகளை வல்லுநர் குழு தேர்வு செய்யும்.

ஏற்கெனவே பரிசு பெற்ற நிறுவனங் கள், பள்ளிகள், சுய உதவிக் குழுக்கள் விண்ணப்பிக்க இயலாது. விவரங் களை 6 நகல்களாக சமர்ப்பிக்க வேண் டும். கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரையிலான காலத்திற்குள் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விவரங்களை சுற்றுச்சூழல் துறையின் www.environment.tn.nic.in மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப் பங்கள் வந்து சேர வேண்டும். மேலே குறிப்பிட்ட முறையில் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x