கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தகவல் தெரிவிக்க டோல் எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தகவல் தெரிவிக்க டோல் எண் அறிவிப்பு
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நிலவும் வறட்சி தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் குடிநீர் பணிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் பழுது நீக்க பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தினசரி சென்று குடிநீர் விநியோகத்தை கண்காணித்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டால்; பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறைக்கு 18004251970 மற்றும் 1299 ஆகிய கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் பி.ஆனந்தராஜ் பொதுப்பணித்துறை அலுவலர்கள், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in