

கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் 79 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
சென்னை மயிலாப்பூரில் 1968-ம் ஆண்டு கோபாலன் என்பவர் கோகுலம் நிதி நிறுவனத்தை தொடங்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் இந்நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், தமிழக அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை புழக்கத்தில் விட உதவியதாகவும் புகார் வந்தது. அதைத் தொடர்ந்து கோகுலம் நிதி நிறுவன அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் 36 இடங்களிலும், கோவையில் 5 இடங்களிலும், கேரளாவில் 29 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும், பெங்களூருவில் 7 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 500 பேர் இந்த சோதனையை நடத்தினார்கள்.
சென்னை அசோக் நகரில் உள்ள கோகுலம் நிதி நிறுவன உரிமையாளர் கோபாலனின் வீடு, தி.நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள நிதி நிறுவன அலுவல கங்கள், கே.கே.நகரில் உள்ள கோகுலம் பார்க் ஓட்டல் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.
“பல ஆண்டுகளாக தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகார் களை தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்படு கிறது. இதில் அரசியல் கார ணங்கள் எதுவும் இல்லை” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.