கலை பண்பாட்டு துறையில் போதிய அதிகாரிகள் இல்லாததால் பணிகள் தாமதம்: வாய்ப்பின்றி வறுமையில் வாடும் நாட்டுப்புறக் கலைஞர்கள்

கலை பண்பாட்டு துறையில் போதிய அதிகாரிகள் இல்லாததால் பணிகள் தாமதம்: வாய்ப்பின்றி வறுமையில் வாடும் நாட்டுப்புறக் கலைஞர்கள்
Updated on
2 min read

கலை பண்பாட்டுத் துறையில் முக்கியப் பணியிடங்கள் காலியாக இருப்பதால், சரியான வாய்ப்பு களுக்கு வழியில்லாமல் நாட்டுப்புறக் கலைஞர்கள் வறுமையில் வாடுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் காலங்காலமாக நடை பெற்று வருகின்றன. நாட்டுப்புறக் கலைகளை அழியாமல் பாது காத்தல், கலைகளின் மீது பொது மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்து தல் போன்ற பணிகளுக்காக கலை பண்பாட்டுத் துறை மாநில அரசால் தொடங்கப்பட்டது.

சித்திரைப் பிறப்பு, பொங்கல், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட விழா நாட்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், கலைஞர்களுக்கு விருது, நாட்டுப் புறக் கலைகளை ஊக்குவித்தல், போட்டிகள் நடத்துதல், பயிற்சி வழங்கல், ஓவியம், சிற்பக்கலை பயிற்சி மற்றும் கண்காட்சி நடத்துதல், நலவாரியம் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கண்ணாடி, கலைஞர்களின் வாரிசு களுக்கு திருமண நிதி, கலைஞர்கள் மறைந்தால் ஈமச்சடங்குக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கலை பண்பாட்டுத் துறை மூலமாகவே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்துறையில் முக்கியப் பணியிடங்கள் பல மாவட்டங்களில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால், பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அலுவலர் கள் சிலர் கூறியதாவது: கலை பண்பாட்டுத் துறை நிர்வாக வசதிக்காக மதுரை, திருநெல் வேலி, திருச்சி, சேலம், தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து கலைநிகழ்ச்சிகளை நடத்துவது, அரசு சார்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பல பணிகள், மாவட்டம்தோறும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் சேலம், திருநெல்வேலி ஆகிய இரண்டு மண்டலங்களில் மட்டுமே உதவி இயக்குநர்கள் உள்ளனர். பிற மண்டலங்களில் இந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் சேலம் மண்டல அலுவலர் காஞ்சிபுரத்தை கூடுதல் பொறுப்பாகவும், துணை இயக்குநர் பொறுப்பில் உள்ள ரா.குணசேகரன் என்பவர் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் சேர்த்து உதவி இயக்குநர் பொறுப்பிலும் பணியாற்றி வருகிறார். இக்காரணங்களால் கலை பண்பாட்டுத் துறையில் உள்ள பல்வேறு பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரை கலாச்சார நகரமாக உள்ளதால், இங்கு உள்ள மக்களின் வாழ்க்கையில் கலைகளும் ஓர் அங்கம். ஆனால், கலைஞர்களுக்கான அங்கீகாரம் வழங்கும் வகையில், எந்தப் பணியும் மேற்கொள்ளப்படுவதில்லை. நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் புதிய திட்டங்கள் ஏதாவது இருந்தாலோ, கலைநிகழ்ச்சி நடத்து வதற்கான வாய்ப்புகளையோ உதவி இயக்குநர்தான் பெற்றுத் தர வேண்டும். ஆனால், அப் பொறுப்பில் யாரும் நியமிக்கப் படாததால் அலுவலக ரீதியாக எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்குக் கூட நாட்டுப்புற கலைஞர்களுக்கு சரிவர வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சிகளையே அவர்கள் நம்பி உள்ளனர். அதுவும் மாதம் முழுவதும் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் வறுமையில் வாடுகின்றனர்.

கலை பண்பாட்டுத் துறையில் ஒரே அலுவலர் பல இடங்களுக்கும் செல்வதால், எல்லாப் பணிகளிலும் தேக்க நிலை உள்ளது. இத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் பலருக்கு இன்னும் பதவி உயர்வு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர்.

கலைஞர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கிடைக்காத காரணத்தால், கலையின் மீது ஆர்வம் குறைந்து, பலர் கட்டு மானப் பணி உள்ளிட்ட வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர் என்றனர்.

இது தொடர்பாக கலை பண்பாட்டுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இத்துறையில் பெரும்பாலான உயர் பதவிகளில் பொறுப்பு அதிகாரிகளே உள்ளனர். நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in