

இலங்கை கடற்படையினரின் துப் பாக்கிச் சூட்டில் மீனவர் பிரிட்ஜோ பலியானதைக் கண்டித்து 5 மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப் பட்டுள்ள இரட்டைமடி, சுருக்கு மடி மூலம் மீன்பிடிப்பதையும், அதிக விசைத் திறன்கொண்ட படகுகளைத் தடுக்கத் தவறிய மீன்வளத் துறையைக் கண்டித்தும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் நாட்டுப் படகு மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மீனவர் பிரிட்ஜோ வின் படுகொலையைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் நடைபெறும் தொடர் தர்ணா போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்றும் தொடர்ந்தனர்.
மேலும் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றதால் ஏற்பட்டுள்ள சூழ் நிலை குறித்து விவாதிக்க ராமநாத புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டி னம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ம் தேதி (வியாழக் கிழமை) நாகப்பட்டினத்தில் நடை பெற உள்ளது.
இக்கூட்டத்தில் துறைமுகம் முற் றுகை உட்பட பல்வேறு போராட் டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக் கடற்படையைக் கண்டித்து, நாகையைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் நாகப் பட்டினம் புதிய கடற்கரையில் கடலில் இறங்கி நேற்று போராட்டம் நடத்தினர். சமூக வலைதளம் மூலமாக ஒன்று திரண்ட இவர்கள், கடலில் இறங்கி நின்றுகொண்டு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரி வித்தும், இலங்கை துணைத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றவும் கோரி முழக்கமிட்டனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் அவர்கள் முழக்கங்கள் எழுப் பினர்.
தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸார் அங்கு சென்று, அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.