

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் உள்ள குளக்கரை ஓரப் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
பள்ளிச் சிறுவர், சிறுமியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ ஒன்று பள்ளிக்கு வந்தது. அதில் வழக்கம்போல 5 மாணவ, மாணவிகள் ஏறினர். ஆட்டோவில் ஓட்டுநர் இருக்கையில் இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர்.
உக்கடம் பைபாஸ் சாலையி லிருந்து திருச்சி சாலைக்கு வரும் வாலாங்குளத்தை ஒட்டிய இணைப் புச் சாலையில் சென்றபோது, திடீ ரென ஓட்டுநரும், உடன் அமர்ந்திருந்த நபரும் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டினர். அதில் பயந்துபோன குழந்தைகள் கூச்சலிட்டனர். அப் போது கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரத்தில் இருந்த குளக்கரை சிறிய பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந் தது. இதைப்பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று ஆட்டோவில் சிக்கி காயமடைந்த குழந்தைகளை மீட்டனர். மூக்கில் காயம் ஏற்பட்ட குழந்தை, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், ஆட்டோ ஓட்டுநர்களை மீட்க முயற்சித்தபோது, இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. பொதுமக்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், ஓட்டுநர்கள் இரு வரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், சுங்கம் காந்திநகரைச் சேர்ந்த பரமசிவம் (40), லாசர் (எ) மாணிக்கம் (42) என்பது தெரியவந்தது.
போலீஸார் கூறும்போது, ‘ஆட்டோவை ஓட்டிவந்த இருவரும் போதையில் இருப்பதால் விசாரிக்க முடியவில்லை. போதை தெளிந்ததும் விசாரித்து வழக்குப் பதிவு செய்யப்படும்’ என்றனர்.
பொதுமக்கள் கூறும்போது, ‘குடி போதையில் வாகனம் இயக்கிய நபர் களிடம் குழந்தைகளை ஒப்படைத் துள்ள பள்ளி நிர்வாகத்தின் மீதும், வாகனத் தணிக்கையை மேற்கொள் ளாத வட்டாரப் போக்குவரத்து அலு வலர்கள், போலீஸார் மீதும் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்’ என்றனர்.