பெட்ரோல் விலை அறிய 24 மணி நேர உதவி மையம்

பெட்ரோல் விலை அறிய 24 மணி நேர உதவி மையம்
Updated on
1 min read

தினசரி பெட்ரோல் விலை குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய உதவி மையத்தை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ளது.

மாதம் இரு முறை நிர்ணயிக்கப் பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 16-ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய் யப்படுகிறது.

இந்நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது வாடிக்கையாளர் கள் தினசரி விலை நிர்ணயத்தை அறிந்து கொள்வ தற்கு வசதியாக மண்டல மற்றும் பிராந்திய அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய உதவி மையத்தை திறந்துள்ளது. 1800-226-550 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாடிக்கை யாளர்கள் தொடர்பு கொண்டு அறியலாம்.

மேலும், 92222 01122 என்ற அலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விலை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in