

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மாவட்டம், கண்டனூரைச் சேர்ந்த அருண் என்ற அருணாச்சலம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. தரிசனக் கட்டணம் என்ற பெயரில், பக்தர்களை பிரித்துப் பார்ப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே கட்டண தரிசன முறையை நீக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று விசார ணைக்கு வந்தது. அறநிலையத் துறை வழக்கறிஞர் வாதிடும் போது, “கோயில்களில் கூட்டங் களை கட்டுப்படுத்தவும், முதி யோர் நீண்ட நேரம் காத்திருக் காமல் விரைவில் தரிசனம் செய்வதற்காகவே கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார். இதை பதிவு செய்துகொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.