Published : 06 May 2017 07:54 AM
Last Updated : 06 May 2017 07:54 AM

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையால் பெண்கள் பாதுகாப்பு பற்றிய அக்கறை அதிகரிக்கும்: சமூக ஆர்வலர்கள் கருத்து

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் 4 குற்றவாளி களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இது சரியா, தவறா? என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

உயிரை பறிக்க உரிமையில்லை

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரை சாமி:

மரண தண்டனை என்பதே அடிப்படையில் தவறான ஒன்று. யாராக இருந்தாலும் மரண தண்டனை கூடாது என்பது என் கருத்து. ஒருவரது உயிரைப் பறிப் பதற்கு யாருக்கும் உரிமையோ, அதிகாரமோ கிடையாது. இது சட்டப்படியான கொலை. பெருங் குற்றம் செய்தவரைக்கூட சாகும் வரை தண்டிக்கலாமே தவிர, மரண தண்டனை விதிக்கக் கூடாது. தவறு செய்தவன் திருந்த வேண் டும் என்பதுதான் தண்டனையின் நோக்கமே. தூக்கில் போட்டுவிட் டால், அவனை எப்படி திருத்த முடியும்?

தீர்ப்பு ஓர் எச்சரிக்கை

தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்:

மரண தண்டனை என்பது நமது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கலாம் என்று சட்டம் சொல் கிறது. நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் இதை தெரிவித் துள்ளது. நிர்பயா வழக்கு, நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர் வலைகளையும், பெண்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத் தியது. அதையும் கருத்தில் கொண்டு, ஆதாரங்கள், ஆவணங் கள் அடிப்படையில் உச்ச நீதிமன் றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு பற்றிய அக்கறை, விழிப்புணர்வு அதிகரித்தால், அதுதான் இந்த வழக்கின் வெற்றி. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு மிகப்பெரிய எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். இத்தீர்ப்பு இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடு வதை யாரும் நினைத்துக்கூட பார்க்காதவாறு, தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆணாதிக்கத்துக்கு விழுந்த அடி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகி:

பொதுவாக மரண தண்டனையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்த குற்றத்தின் மிகக் கொடூர மான தன்மை, மக்கள் மத்தியில் உருவான கடுமையான அதிருப்தி, அதையொட்டி வர்மா கமிஷன், பின்னர் சட்டதிருத்தம் போன்ற எதிர்வினைகளை உருவாக்கி யுள்ள முக்கியமான வழக்கு இது. அதனால் இந்த தீர்ப்பு வரவேற் கத்தக்கது. இந்தக் குற்றவாளிகள் சிறையில் இருந்து பேட்டி அளித்தபோது, செய்த தவறுக்கு அவர்கள் எந்த விதத்திலும் மனவருத்தம் அடைந்ததாகத் தெரியவில்லை.

‘பெண் என்றால் வீட்டில் இருக்க வேண்டும். இரவில் நண்பருடன் வீதிக்கு வந்தது தவறு. எங்களை எதிர்த்து சண்டை போட்டாள். அவளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க அப்படி நடந்துகொண்டோம்’ என்று கூறியிருந்தனர். குற்றவாளிகளின் மனப்பதிவாக மட்டும் இல்லாமல் சமூகத்தின் ஒரு பகுதியினுடைய சிந்தனையாகவும் இருக்கிறது. அதனால் இந்த தண்டனை அவர்க ளுக்கு மட்டுமல்லாது, ஆணாதிக்க சிந்தனைப் போக்குக்கு விழுந்திருக் கும் அடி. இந்த தீர்ப்பில் இருந்து, சட்டப்படி நடக்க வேண்டும் என்ற பாடத்தை காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x