

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம், கடையடைப்பு நடத்தப்படும் என தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. இதேபோல் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொருளாளர் வி.தயானந்தம் கூறும்போது, ‘‘விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி அரசியல் கட்சிகள் சார்பில் வரும் 25-ம் தேதி நடக்கவுள்ள ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஐடியு, தொமுச உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களும் பங்கேற்கும்’’ என்று தெரிவித்தார்.