

``ரஜினி உட்பட யார் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். அதே நேரம், அரசியலுக்கு வருவ தற்கு முன் தனது கொள்கைகள் குறித்து ரஜினி அறிவிக்க வேண் டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலி யுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், மேல் புறத்தில் கல்வீசித் தாக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவல கம், செம்மங்காலையில் உடைக்கப் பட்ட நினைவு ஸ்தூபி ஆகியவற்றை அவர் நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்த பின்னரும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒன்றரை லட்சம் பேருக்குகூட வேலை வழங்கவில்லை.
அதிமுகவை மிரட்டுகிறது
அதிமுகவை மத்திய அரசு மிரட்டுகிறது. தமிழகத்தில் வறட்சி நிவாரணப் பணி, வகுப்புவாதம் போன்றவை தலைதூக்குவதை தடுப்பதற்காக திமுகவுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது கூட்டணிக்கான அச்சாரமென்று கருதிவிட வேண் டாம். தமிழகத்துக்கு வழங்கவேண் டிய ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு இதுவரை வழங்க வில்லை.
நடிகர் ரஜினிகாந்த் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலுக்கு வரும்முன் தனது கொள்கைகள் குறித்து ரஜினிகாந்த் அறிவிக்க வேண்டும் என்றார்.