

அமைச்சர்கள், எம்எல்ஏக்களு டன் போயஸ் தோட்டத்தில் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் நேற்று முன் தினம் நடந்த அதிமுக எம்எல்ஏக் கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக பதவி யேற்க உள்ள சசிகலாவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போயஸ் தோட்டத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமைச் செயலர் சந்திப்பு
தமிழக தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன், நேற்று காலை சசிகலாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வரின் செயலர் நிலை-3 விஜயகுமார் போயஸ் தோட்டத் துக்கு வந்தார். அதன்பின், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, கே.ஏ.செங் கோட்டையன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் வந்தனர். 11.10 மணிக்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, செல் லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி ஆகியோர் போயஸ் தோட்டத்தில் இருந்து புறப் பட்டுச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து, 11.20 மணிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வந்தார். அவர் அங்கிருந்து சென்றதும் அமைச் சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செம்மலை எம்எல்ஏ, மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். பிற் பகல் 2 மணிக்குமேல் அனை வரும் அங்கிருந்து புறப்பட் டுச் சென்றனர். புதிய அமைச் சரவை மற்றும் பதவியேற்பு விழா குறித்து அமைச்சர் கள், எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
புதியவர்களுக்கு வாய்ப்பு
சசிகலா தலைமையிலான அமைச்சரவையில், புதியவர் கள் சிலர் இடம் பெறலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. செங்கோட்டையன், செந்தில் பாலாஜி. பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெய ராமன், தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி, தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர். இது தவிர மேலும் சில புதிய எம்எல்ஏக்களையும் சசிகலா தரப்பு அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் வரவில்லை
சட்டப்பேரவை கட்சித் தலை வராக சசிகலா தேர்வு செய்யப் பட்ட பிறகு, மூத்த அமைச்சர்கள் போயஸ் தோட்டத்துக்கு வந்து சென்றனர். ஆனால், முதல்வர் ஓபிஎஸ் மட்டும் நேற்று வரவில்லை. பிற்பகலில் அவர் வருவார் என கூறப்பட்டது. இருப்பினும் அவர் சசிகலாவை சந்திக்க வரவில்லை.
பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் அல்லது பேரவைத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பேரவையில் அனுபவம் வாய்ந்த ஒருவர் இருந்தால், எதிர்க்கட்சியினரை சமாளிக் கலாம் என்பதால் பன்னீர்செல் வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரம், கட்சி நிகழ்வுகளில் ஓபிஎஸ் பங்கேற்பதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு பேரவைத் தலைவர் பதவி அளிக்கப் படலாம் என்றும் கட்சி யில் ஒருசாரார் தெரிவிக் கின்றனர்.