Published : 15 Mar 2017 10:00 AM
Last Updated : 15 Mar 2017 10:00 AM

சிவகாசி, திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபத்தில் 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்

சிவகாசி, திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பனையடிப்பட்டி யைச் சேர்ந்தவர் செல்வம்(28). திருத் தங்கல் பதுவை நகரில் இவருக்குச் சொந்தமான வாணவெடி மற்றும் பேன்ஸி ரக வெடிகள் தயாரிக்கும் அட்டை குழாய் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் சட்ட விரோதமாக ஃபேன்ஸி ரக பட்டாசு கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையால் தடை விதிக்கப்பட்ட வேதிப் பொருளான பெர்குளோ ரைடை பயன்படுத்தி வாணவெடி மற்றும் ஃபேன்ஸி ரக பட்டாசுகளும் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல குடோ னில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. தொழிலா ளர்கள் வாணவெடி தயாரிக்க அட் டைக் குழாயில் மருந்து செலுத் தியபோது, ஊராய்வு ஏற்பட்டு திடீரென வெடிமருந்துக் கலவை வெடித்துச் சிதறியது. இதில், அங்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்த திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி(19), இருதய ராஜ்(45), எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த அய்யப்பன்(62), கே.கே.நகரைச் சேர்ந்த ஜெயபால்(33), திருத்தங்கலைச் சேர்ந்த நாதன்(30), பனையூர்பட்டியைச் சேர்ந்த மாரி யப்பன்(58) ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த சிவகாசி தீய ணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து, விபத்தில் சிக்கிய 6 பேரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் நாதன் உயிரிழந்தார். மற்ற 5 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் சிவ காசி வட்டாட்சியர் தர், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி வட்டாட்சி யர் சங்கரபாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அடியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்குச் சொந்தமான தென் னந்தோப்பில் நாட்டு வெடி மருந்து மற்றும் நாட்டு வகை பட்டாசுகளை தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். இங்கு தயாரிக்கும் நாட்டு வெடிகளை தனது பட்டாசுக் கடையில் வைத்து விற்பனை செய்து வந்தார்.

நாட்டு வெடி மருந்து தயாரிக் கும் ஆலையில் அடியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங் கம்(35), காந்தி(30) ஆகியோர் நேற்று பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் 2 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த காந்தி, பொன்னுரங்கம் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் சச்சிதானந்தம், ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் ரத்தினசபாபதி மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர்.

விசாரணையில், உரிய அனுமதி யின்றி சட்டவிரோதமாக நாட்டு வெடி மருந்து ஆலையை நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராஜாவைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x