மருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு

மருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு
Updated on
1 min read

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே வேளாண் படிப்பு களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தெரி வித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நேர மில்லா நேரத்தில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தமிழகத்தில் வேளாண் படிப்பு களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள் ளது. தற்போது நீட் தேர்வு அடிப் படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்க உள்ளது. பொறியியல் கலந்தாய்வை, மருத்துவ கலந் தாய்வு முடிந்த பின்னரே நடத்த உயர் கல்வித்துறை முடிவெடுத்துள் ளது. அதேபோல், வேளாண் படிப்பு களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வை யும் தள்ளி வைக்க வேண்டும்.

தற்போது வேளாண் படிப்பு களில் சேர்ந்தவர்கள் மருத்துவம் செல்ல வாய்ப்புள்ளது. அந்த காலி யிடங்களில் தனியார் வேளாண் கல்லூரிகளில் சேர்ந்த அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்துள்ளவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ‘‘கடந்த ஜூன் 19 முதல் 24 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட் டது. அடுத்த கலந்தாய்வு ஜூலை 12 முதல் 15 வரை நடப்பதாக அறி விக்கப்பட்டிருந்தது. தற்போது, மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின் வேளாண் படிப்புக்கான கலந் தாய்வை நடத்துவதென முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள் ளது. அதே நேரம், காலியிடங்களில் ஏற்கெனவே வேறு கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு இடம் அளிக்கும் முறை இந்த ஆண்டு பின்பற்ற முடியாது. வரும் ஆண்டு களில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in