Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM

கேஜ்ரிவாலுக்கு எதிராக சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஊழல்வாதிகளின் பட்டியலில் காங்கிரஸாரின் பெயர்களை சேர்த்ததால் அக்கட்சியினர் கேஜ்ரிவாலுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை டெல்லி முதல்மந்திரி கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இதில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதைக் கண்டித்து கேஜ்ரிவாலுக்கு எதிராக கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் விருகம்பாக்கம் பகுதி காங்கிரஸ் சார்பில் சாலி கிராமம் காமராஜர் சிலை முன்பு

கேஜ்ரிவாலை கண்டித்து ஞாயிற்று கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது கேஜ்ரிவாலின் கொடும்பாவி தீவைத்து கொளுத்தப்பட்டது. மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியிலும் கேஜ்ரிவாலை கண்டித்து காங்கிரசார் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x