

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தானாகவே தோற்றுப் போகும் என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
நான் ஹாங்காங் சென்று திரும்பியதும், கொட்டாம்பட்டி ராஜேந்திரன் உள்பட எனது ஆதரவாளர்கள் 5 பேரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக கூறினர். கட்சித் தேர்தலில் நடந்த முறைகேடு பற்றி அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதுபற்றி கட்சித் தலைமையிடம் புகார் தெரிவித்தேன்.
ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் மீண்டும் நியாயம் கேட்க சென்றேன். அதற்கு எனக்குக் கிடைத்த பரிசுதான் இது. திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது. வரும் 31–ம் தேதி மதுரையில் பத்திரிகையாளர் களைச் சந்திப்பேன். அப்போது திமுக உள்கட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.
இவ்வாறு அழகிரி கூறினார். தொடர்ந்து நிருபர்களின் கேள்வி களுக்கு அவர் அளித்த பதில்கள்:
கட்சிக்குள் குழப்பம் ஏற்படும் வகையில் போஸ்டர் ஒட்டியதால் தான் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறார்களே?
அந்த மாதிரி என்ன போஸ்டர் ஒட்டினார்கள் என்று காட்டட்டும் பார்க்கலாம். நான் என்ன குழப்பம் செய்தேன். போஸ்டர் ஒட்டுவது குற்றமா? தலைவர் இருக்கு ம்போதே வருங்கால தலைவரே என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். சுயமரியாதை பொதுச் செயலாளர் அதற்கு நடவடிக்கை எடுத்தாரா?
திமுகவில் இருந்து நீக்கப்பட் டிருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவீர்களா?
நான் தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை.
கடந்த 2000–ம் ஆண்டில் இதே போல் பிரச்சினை ஏற்பட்டபோது போட்டி வேட்பா ளர்களை நிறுத்தினீர்கள். அதுபோல் இந்தத் தேர்தலிலும் போட்டி வேட்பாளர்களை நிறுத்துவீர்களா?
அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. அது தேவையும் இல்லை. போட்டி வேட்பாளர்கள் இல்லாமலேயே திமுக தானாகவே தோற்றுப்போகும்.
இவ்வாறு அழகிரி கூறினார்.