Published : 17 Nov 2014 11:32 AM
Last Updated : 17 Nov 2014 11:32 AM

சிறு, குறு நிறுவன உரிமையாளர்கள் மாதிரி கணக்கெடுப்பு தொடங்கியது

திருவள்ளூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் மாதிரி கணக்கெடுப்பு 2015 ஜனவரி வரை நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசின் 13-வது நிதிக்குழு ஒதுக்கீட்டின் பேரில், தமிழக அரசின் பொருளாதார கணக் கெடுப்பு துறை சார்பில், மாநில நிகர உற்பத்தித் திறனில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு பற்றிய மாதிரி கணக்கெடுப்பு பணி திருவள்ளூர் மாவட்டத்தில் இம்மாதம் முதல், 2015 ஜனவரி வரை நடைபெற உள்ளது. இதற்கென மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் மற்றும் மண்டல இணை இயக்கு நரால் நியமிக்கப்பட்டுள்ள கணக் கெடுப்பாளர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை, கணக் கெடுப்பு பணிக்கு அணுக உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் போது நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கை திறன், மூலப்பெருட் கள், எரிபொருள், வேலை வாய்ப்பு, ஊதியம், ஏற்றுமதி, நிலை யான பொருட்கள் மதிப்பீடு, இயந் திர தளவாடங்கள் மதிப்பீடு, உற்பத்தி உள்ளிட்ட சேவை விவரங்கள், ஒட்டுமொத்த மூல தனம், கடன் பெற்ற விவரம், கடன் நிலுவை மற்றும் இதர சில தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது. மேலும், நலிவுற்ற அல்லது நலிவுறும் நிலையில் உள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல் களும் சேகரிக்கப்பட உள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள், கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சரியான தகவல்களை அளிக்க வேண்டும். இந்த தகவல்கள் ரகசியமாக வைக் கப்படும்.

தகவல்கள் யாவும் புள்ளி விவர கணக்கெடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x