குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அடையாள அட்டை: உயிர்நீத்த முப்படை வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் கருணைத் தொகை - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அடையாள அட்டை: உயிர்நீத்த முப்படை வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் கருணைத் தொகை - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
Updated on
2 min read

போர் மற்றும் பாதுகாப்பு பணிகளில் உயிர்நீத்த முப் படை வீரர்களின் வாரிசுதாரர் களுக்கான கருணைத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் நிதி, பொது, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. விவாத முடிவில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதி மற்றும் பொதுத்துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கருவூலக் கணக்குத்துறையில் உள்ள கணக்கர், கண்காணிப் பாளர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர்களுக்கு நிதிக்கணக் கியல், ஓய்வூதியம், பட்டியல் ஏற்பளிப்பு உள்ளிட்டவை தொடர் பாக ரூ.23 லட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும். உள்ளாட்சித் துறையில் நிதித் தணிக்கைதுறை தணிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கூட்டுறவு தணிக்கைத்துறையில் அனைத்து நிலையிலான தணிக்கையாளர் களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாடு அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓய்வூதியர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.4,500 லிருந்து 6 ஆயிரமாகவும், அவர்தம் கைம்பெண்களுக்கான நிதியுதவி ரூ.2,500 லிருந்து 3 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

மறு வேலைவாய்ப்பு அடிப் படையில் குடிமைப்பணியில் வேலை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் குடும்பங்களுக்கு ராணுவ குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடிமைப் பணிக்கான குடும்ப ஓய்வூதியம் என இரட்டை குடும்ப ஓய்வூதி யம் வழங்கப்படும். 2003ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் குடிமைப்பணியில் மறு வேலைவாய்ப்பு பெற்ற முன் னாள் படைவீரர்களுக்கு இது பொருந்தும்.

போர் மற்றும் பாதுகாப்பு பணிகளில் உயிர்நீத்த முப்படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கருணைத்தொகை ரூ.10 லட்சத் தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. கடுமையான காயத்தால் 2 கை, கால், கண்களை இழந்தவர்களுக்கு கருணைத் தொகை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், ஒரு கை, கால்,கண் இழந்தவர் களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

போர் மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகளில் உயிர்நீத்த தமிழகத் தைச் சேர்ந்த படைவீரர்களின் கைம்பெண்கள், வாரிசுதாரர் களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும். உடல் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கான கருணைத் தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

போர் விதவை மகள்கள், போர் நடவடிக்கைகளில் 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுற்ற தமிழகத்தைச் சேர்ந்த படைவீர்ர்களின் மகள்களுக்கு வழங்கப்படும் திருமண மானியம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தபடுவதுடன், திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும். 50 சதவீதத் துக்கு குறைவான ஊனமுற்ற வர்களின் மகள்களுக்கு திருமண மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதுடன் திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 இறுதித்தேர்வுகளில் மாநில அளவில் மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் முதல் 5 இடங்களை பிடிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in