

கலைப் படைப்புகளுக்கான போட்டியை ரிசர்வ் வங்கி நடத்துகிறது. இதில் பங்கேற்க ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் கலைப் படைப்புகள் போட்டி ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நடத்த உள்ளது. இதன் நோக்கம் கலைப் படைப்புகளில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வளரும் கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரத்தையும், ஊக்கத்தையும் அளிப்பதாகும். இப்போட்டியில் பங்கேற்பவர்கள் இந்தியக் குடிமகனாகவும், தொழில் ரீதியான நுண்கலைக் கல்லூரியில் தற்போது மாணவராகவும் இருத்தல் வேண்டும்.
சிற்பம், வரைதல், வண்ணம் தீட்டல், அச்சிடல், படக்கலவை, புகைப்படம், இதர படவகைகள் ஆகியவற்றில் தங்களது படைப்புகளை சமர்ப்பிக்கலாம். சிலையின் எடை 25 கிலோ மற்றும் பட வடிவங்கள் 100 செ.மீட்டர் * 100 செ.மீட்டர் அளவில் இருக்க வேண்டும். ஒரு படைப்பாளி அதிகபட்சமாக 3 படைப்புகளை தரலாம். தொடக்கத்தில் படைப்பின் புகைப்படம் மட்டுமே நுழைவுப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்
நுழைவுப் படிவங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக, மேலாளர் வி.கே.நிரஞ்சன் (தொலைபேசி எண். 044-25380078/9962281218), உதவி மேலாளர் பி.எஸ்.ரவி (044-25399212/9962544334) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். மேலும், artcontestchennai@rbi.org.in என்ற இ-மெயில் முகவரி மூலம் தொடர்பு கொண்டு அறியலாம்.