

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில், இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியது. மின் உற்பத்தி தொடங்கிய முதல் நாளில் 160 மெ.வா மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர்: முதற் கட்டமாக 75 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், பின்னர் 160 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ததாகவும் கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
நிர்ணயிக்கப்பட்ட 400 மெகாவாட் மின்சாரம், இந்திய அணுசக்தி கழகத்தின் அனுமதி கிடைத்த பிறகு துவங்கும் என்றார்.