

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றக் கோரி ஆம் ஆத்மி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் காலவரை யற்ற உண்ணா விரதத்தை சென்னை கொளத்தூரை அடுத்த பெரவள்ளூர் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் நேற்று 10-வது நாளை அடைந்த நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி மாநில எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பாரதி நேற்று அவரை சந்தித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், 2016 சட்டப் பேரவைத் தேர்தலின் போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மிகட்சியினர் எரித்தனர். போராட் டத்தில் ஈடுபட்டவர்களை போலீ ஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். மேலும், 10-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த வசீகரனின் உடல் நிலை மோச மடைந்த தால் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.