Published : 20 Aug 2016 08:44 AM
Last Updated : 20 Aug 2016 08:44 AM

24 மணி நேரத்தில் வெற்றிகரமான 4 பெருந்தமனி அறுவை சிகிச்சைகள்: வடபழனி சிம்ஸ் மருத்துவமனை புதிய சாதனை

வடபழனி சிம்ஸ் மருத்துவமனை யில் 24 மணி நேரத்தில் வெற்றிகர மான 4 பெருந்தமனி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவ மனையின் செய்திக்குறிப்பு:

பெருந்தமனி நோய்களுக்கான சிகிச்சையில் பெருந்தமனி குருதிநாள அழற்சி பிளப்பாய்வு நோய்க்கு பரவலாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உயி ருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் நோய் ஏற்பட்ட பெருந்தமனியை ஒட்டுமுறைப் பதியம் மூலம் மாற்றுவதே சிறந்த சிகிச்சையாகும். இந்த வகை சிகிச்சைமுறை சில மருத் துவமனைகளில் மட்டுமே செய்யப் படும் இந்த அறுவை சிகிச்சை நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றுதான் நடைபெறுகிறது.

ஆனால், சிம்ஸ் மருத்துவமனை யில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி 4 அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுள்ளன. முதலில் அனுமதிக்கப் பட்ட கொல்கத்தா சாய்காந்த் சாஹா என்பவருக்கு இதய அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் வி.வி.பாஷி, இடையீட்டு இதயம் மற்றும் அகநோக்கு குருதிநாள சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கோபால் முருகன், இதய தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் அஜூ ஜேக்கப், 12 உயர் பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து அறுவை சிகிச்சை செய்தனர்.

அதே சமயத்தில் பெருந்தமனி குருதிநாள அழற்சி பிளப்பாய்வு பிரச்சினை, தண்டுவட பக்கவாதம் காரணமாக கால்களை அசைக்க முடியாத நிலையில் வெங்கடேசன் (56) அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் சந்திரகலா (51) என்பவ ரும் ஆபத்தான பெருந்தமனி குருதிநாள அழற்சி பிளப்பாய்வுக் காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர் கோபால் முருகன் தலை மையில் ஒரு குழுவும், டாக்டர் பாஷி தலைமையில் ஒரு குழு வும் அறுவை சிகிச்சை செய்த னர். அப்போது சிம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த்குமார் என்பவருக்கும் பெருந்தமனி குருதிநாள அழற்சி பிளப்பாய்வுக்காக அவசர சிகிச்சை தேவைப்பட்டது. குழு உடனடியாக செயல்பட்டு காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தது.

அடுத்தடுத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகளை செய்து முடிக்க அந்த குழுக்களின் நீண்ட அனுபவமும் மேலாண்மைத் திறமையும், பல்வேறு துறை ஊழியர்களின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்புமே காரணமாக அமைந்தது.

தற்போது அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் அனைவரும் நன்கு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x