தூய்மையான அரசியலை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தூய்மையான அரசியலை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
Updated on
1 min read

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: அதிமுக பொதுச் செயலா ளர் சசிகலா உள்ளிட் டோர் ஊழல் வழக் கில் தண்டனை பெற்று இருப்பது ஊழல் ஒழிப்பின் முதல் படி. இந்த தீர்ப்பின் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டு உள்ளது. ஊழல் ஒழிக்கப்பட்டு தூய்மையான அரசியலை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும்.

யாருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமோ, அவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்கள் நலனை கருத்தில்கொண்டு நிலையான ஆட்சி அமையும் வகையில் முடிவு எடுக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களை விடுதிகளில் அடக்கி அடைத்து வைத்திருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநர் காலஅவகாசம் எடுத்துக் கொண்டது சரியான நடவடிக்கைதான் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய மறு தேர்தல் தேவை என்ற கோரிக்கை எழுந்திருந்தாலும், அவசரப்பட்டு முடிவெடுக்காமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in