ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்யாதது ஏன்?- உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்யாதது ஏன்?- உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

பிற மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக உள்துறை செயலர் இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக பதிவாளர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வு தாமாக முன்வந்து நேற்று விசாரணைக்கு எடுத்தது.

அப்போது நீதிமன்றத்தில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவ லர் கல்யாணகுமார், மதுரை மத்தி வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோரிடம் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதைத் தடுப்பது தொடர்பாக நீதிபதி கள் பல்வேறு கேள்விகளை எழுப் பினர்.

அதற்கு அவர்கள், “ஒப்பந்த அடிப் படையில் இயக்கப்படும் பஸ்களில் அதில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பண்டிகை நாட்கள், விடுமுறை நாட் களில் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டு விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது” என்ற னர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்றனர். அதற்கு, “கட்டணம் நிர்ணயம் தொடர்பாக இதுவரை அரசாணை எதுவும் இல்லா ததால் நடவடிக்கை எடுக்க இயல வில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “பிற மாநிலங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை அந் தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்யும்போது, தமிழகத்தில் அரசு ஏன் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக உள்துறை செயலர், போக்குவரத்துறைச் செயலர் ஆகி யோர் இன்று பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in