

வேலூர் அருகே ஏடிஎம் இயந்தி ரத்தை உடைத்து ரூ.11 லட்சம் பணத்தை திருடிச் சென்ற வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 பேரை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.
காட்பாடி திருநகர் அருகே மற்றும் வேலூர் அடுத்த மேல் மொணவூரில் உள்ள தனியார் வங்கிகளின் 2 ஏடிஎம் மையங்களில் கடந்த 26-ம் தேதி நள்ளிரவு திருட்டு சம்பவம் நடந்தது. அந்த ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து, அதில் இருந்த 11 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம், கண்காணிப்புக் கேம ராவில் பதிவாகி இருந்தது. வாக னத்தின் பதிவு எண்ணை வைத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் விசாரித்த னர். அதன் மூலம், வாகனத்தை விலைக்கு வாங்கிச் சென்ற நபர் களின் விவரம் மற்றும் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.
அதில், பெங்களூரு அடுத்த நல மங்கலாவில் பதுங்கி இருந்த ஹரியாணா மாநிலம் மேவாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூபேர்(26) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 4 பேரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகல வன் கூறும்போது,
‘‘ஏடிஎம் பணம் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய வர்களில் முக்கியமான நபர் ஜூபேர் என்பவர் கர்நாடக மாநிலம் நலமங்கலாவில் தங்கி இது போன்ற திருட்டு சம்பவங் களில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் நெடுஞ்சாலையோரம் உள்ள ஏடிஎம் மையங்களில் திருட வேலூர் வந்துள்ளனர்.
ஜூபேரின் கூட்டாளிகள் மீது ஏற்கெனவே ஹரி யாணா, ராஜஸ்தான் மாநிலங் களில் பணத்தை திருடிய வழக்கு பதிவாகி உள்ளது. அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை காஸ் வெல் டிங் மூலம் உடைத்து பணத்தை திருடுவதில் கைதேர்ந்தவர்கள்.
வாகனம், காஸ் வெல்டிங் கருவிகளை பறிமுதல் செய்துள் ளோம். மற்ற 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றார்.