Published : 03 Jan 2017 08:17 AM
Last Updated : 03 Jan 2017 08:17 AM

சிவாஜி கணேசனின் நினைவு நாளுக்குள் மணி மண்டபம் கட்டி முடிக்க வேண்டும்: ரசிகர்கள் கோரிக்கை

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு அரசு இடம் ஒதுக்கி 14 ஆண்டுகள் ஆகியும் மண்டபம் எழும்பியபாடில்லை. இந்த ஆண்டு அவரது நினைவு நாளுக்குள் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று ரசி கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2001 ஜூலை 21-ல் சிவாஜி கணேசன் இயற்கை எய்தினார். நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 65 சென்ட் இடத்தை சிவாஜி மணி மண்டபம் கட்ட நடிகர் சங்கத்துக்கு ஒதுக்கி 26.09.2002-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அந்த இடத்தின் ஊடே நீதிபதி கள் குடியிருப்புக்குச் செல்லும் பாதை சென்றதால் அதற்கான மாற்றுப்பாதை அமைப்பதற்கான ரூ. 4.20 லட்சத்தை நடிகர் சங்கம் ஏற்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 26.07.2004-ல் ரூ.2 லட்சத்தை மட்டும் நடிகர் சங்கம் செலுத்தியது. மீதித் தொகையை அரசே செலுத்தியது. அந்த இடத்துக்கு 2006-ல் சுற்றுச் சுவரும் அரசால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அப்படியும், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், 22.04.2005-ல் அப்போதைய நடிகர் சங்கத் தலை வராக இருந்த விஜயகாந்த், மணி மண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தினார். பின்னர், சிவாஜி மணி மண்டபத்தை அரசே அமைக்கும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேரவையில் அறிவித்த ஜெயலலிதா, இதற்காக ரூ.2.80 கோடி நிதியும் ஒதுக்கினார்.

இதைத் தொடர்ந்து மணிமண் டபத்தில் காப்பாளர், காவலர், தோட்டக்காரர், துப்புரவாளர் ஆகிய நான்கு பணியிடங்களை உருவாக் கவும் மணி மண்டப புகைப்பட அரங்கில் சிவாஜியின் 188 படங் களை வைப்பதற்கு ரூ. 5,53,540 நிதி ஒதுக்கியும் ஆணைகள் பிறப் பிக்கப்பட்டன. ஆனாலும் மண்ட பம் எழும்பியபாடில்லை.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 5 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய சிவாஜி சமூக நல பேரவைத் தலைவர் சந்திரசேகரன், ‘‘சிவாஜி மணிமண்டபத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திட்ட மிட்டபடி 5 மாதங்களுக்குள் பணி கள் முடிக்கப்பட்டு, ஜூலையில் சிவாஜி நினைவு தினத்தில் மணி மண்டபத்தை திறக்க வேண்டும் என் பதே எங்களின் எதிர்பார்ப்பு. அதே சமயம், இந்த மணிமண்டபத்தை ஒரு சாதாராண கட்டிடமாக மட்டும் அமைக்காமல் அனைவரும் வியக் கும் கலையின் அடையாளமாக உருவாக்க வேண்டும். அதற் கேற்ப தென்னிந்திய நடிகர் சங்கமும் கட்டுமானப் பணிகளில் தங்களது பங்களிப்பை தந்து மணிமண்டபத்தை பொலிவுறச் செய்யவேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x